www.garudabazaar.com

மாஸாக வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் Soul of Doctor தீம் இசை வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள Doctor படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

siva karthikeyan doctor movie soul of doctor song released

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டாக்டர் (Doctor) திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அதே அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. 

siva karthikeyan doctor movie soul of doctor song released

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் (25.09.2021) அன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் டிரெய்லரின் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்றது.

siva karthikeyan doctor movie soul of doctor song released

அதனைத்தொடர்ந்து படக்குழு பிண்ணனி இசையை Soul of Doctor என்ற பெயரில், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் காட்சிகளை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த தீம் இசை கிளாசிக் - வெஸ்டர்ன் வகைமையில் அமைந்துள்ளது. இதனை அனிருத் இசையில் பாடகி நிரஞ்சனா ரமணன் பாடியுள்ளார்.

மாஸாக வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் SOUL OF DOCTOR தீம் இசை வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

siva karthikeyan doctor movie soul of doctor song released

People looking for online information on Anirudh, Doctor, Nelson, Priyanka Mohan, Sivakarthikeyan will find this news story useful.