www.garudabazaar.com

BB Ultimate : "சிம்புவுக்கு பிக்பாஸ் பழக்கம் இல்ல.. அவருக்கு புரியாது.." அனிதா பரபரப்பு கருத்து.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் இதுவரை ஐந்து பிக்பாஸ் சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Simbu new to BB Ultimate so he cant understand deeply Says Anitha

வேற‌ லெவல்.." பாரதி கண்ணம்மா'ல நடக்க போகும் ட்விஸ்ட்? ஹேமா சொன்னது என்ன?

கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் பட்டியலில் இருந்து, நபர்களைத் தேர்வு செய்து இந்த அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில், வனிதா போட்டியின் பாதியில் விலக, சுரேஷ் சக்கரவர்த்தி, KPY சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர், வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்தனர்.

கமலுக்கு பதில் சிம்பு

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் மூன்று வார நிகழ்ச்சியினை மற்ற பிக்பாஸ் சீசன்களை போல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பு உள்ளிட்ட பிற காரணங்களுக்காக, கமல்ஹாசன் பாதியில் விலக, அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

Simbu new to BB Ultimate so he cant understand deeply Says Anitha

அனிதா என்ட்ரி

இந்நிலையில், நடிகர் சிம்பு குறித்து அனிதா பேசியுள்ள கருத்து ஒன்று, தற்போது பிக்பாஸ் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்காவது சீசனில் போட்டியாளராக வந்த அனிதா சம்பத், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இடம்பிடித்திருந்தார்.

கெட்ட வார்த்தைகள்

ஜூலியுடன் மோதல், மற்ற போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து கருத்து சொல்வது என அனிதாவின் பல செயல்கள், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தினை சந்தித்திருந்தது. அதே போல, நிரூப்பிடம் பேசும் அனிதா, சில கெட்ட வார்த்தைகளை இணைத்து பேசியிருந்தார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

Simbu new to BB Ultimate so he cant understand deeply Says Anitha

சிம்பு பற்றி அனிதா

இந்நிலையில் தான், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வரும் சிம்பு குறித்து ஒரு கருத்தினை அனிதா தெரிவித்துள்ளார். அதன்படி, சக போட்டியாளர் சுருதியிடம் பேசும் அனிதா, "நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம். இது சிம்புவுக்கு புரியாது. இது பற்றி யோசிக்கவும் மாட்டார். அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இது புரிந்திருக்கும். ஏனென்றால் அவர் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளார்" என அனிதா தெரிவித்துள்ளார்.

Simbu new to BB Ultimate so he cant understand deeply Says Anitha

அதிக பிரபலம்

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் அனிதாவின் கருத்துடன் ஒத்துப் போவதாக கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், “கமல் சாரின் அனுபவம் ஒப்பீடு செய்ய முடியாதது. அதே போல் நடிகர் சிம்பு வார இறுதிகளில், அவர் கேட்கும் கேள்விகள், பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்ய விஷயங்கள், அவருடைய இயல்பு உள்ளிட்டவையும் அதிக அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது!” என்கிற கருத்தினையும் கூறி வருகின்றனர்.

"அப்படி சொல்றவங்க மூஞ்சிலயே அடிக்கணும்.." பிரபல சீரியல் நடிகர் ஆவேச போஸ்ட்.. பின்னணி என்ன??

தொடர்புடைய இணைப்புகள்

Simbu new to BB Ultimate so he cant understand deeply Says Anitha

People looking for online information on Anithasampath, BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Silambarasan, Simbu, Vijay Television will find this news story useful.