www.garudabazaar.com

அட்ரா சக்க!!! .. ‘கிருஷ்ண ஜெயந்தி’யை முன்னிட்டு.. சிபிராஜின் ‘மாயோன்’.. அசத்தல் டைட்டில் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிபிராஜ் நடிப்பில் அண்மையில் வெளியான கபடதாரி படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு, சிபி நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாயோன் படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டருடன் கிருஷ்ண ஜெயந்தியை வாழ்த்துக்களை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Sibiraj Maayon film poster ilayaraja music சிபிராஜ் மாயோன்

இந்த படத்தில் சிபிராஜ்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருந்ததன் மூலம் பிரபலமானார். தவிர, மாயோன் படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

டபுள் மீனீங் புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை  அருண்மொழி மாணிக்கம் தயாரித்து திரைக்கதை எழுத, இப்படத்தை கிஷோர் இயக்கியுள்ளார். முன்னதாக இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இசைஞானி இளையராஜா இசை அமைக்கும், இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் பட வெளியீட்டு தேதியை, விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிடவிருக்கிறார்கள்.

Also Read: “Elimination ரவுண்டுனு தெரியாதா? Over Confident-ஆ?”.. குற்றவுணர்ச்சியில் அழுத சுனிதா.. என்ன நடந்தது?

தொடர்புடைய இணைப்புகள்

Sibiraj Maayon film poster ilayaraja music சிபிராஜ் மாயோன்

People looking for online information on Illayaraja, Sibiraj will find this news story useful.