Pattamboochi

சிபிராஜ், ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்… ஓடிடி ரிலீஸ்… கவனம் ஈர்க்கும் Title & ஃபர்ஸ்ட்லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

Sibiraj andrea vattam movie firstlook and title announcement

தயாரிப்பாளர் SR பிரபு தயாரிப்பில் சிபிராஜ், ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SR பிரபு

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டோரை வைத்து மாஸ் படங்களை எடுப்பது ஒரு பக்கம் என்றால் நல்ல கதைக்களத்தோடு கம்மியான பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்கி அவற்றையும் வெற்றி படங்களாக்கியவர் எஸ் ஆர் பிரபு. இவர் தயாரிப்பில் வெளியான அருவி, டாணாக்காரன், மாயா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் இவர்கள் நிறுவனத்தின் o2 திரைப்படம் ரிலீஸானது.

வட்டம்

‘மதுபானக்கடை’ என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் கமலக்கண்ணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் அடுத்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, சிபிராஜ், அதுல்யா ரவி மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு வட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Sibiraj andrea vattam movie firstlook and title announcement

டிஸ்னியில் அடுத்தடுத்து படங்கள்

SR பிரபு தயாரிப்பில் சமீபத்தில் ‘டாணாக்காரன்’ மற்றும் o2 ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கவனம் பெற்றன. அந்தவகையில் ‘வட்டம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sibiraj andrea vattam movie firstlook and title announcement

People looking for online information on Sibiraj, SR Prabhu, Vattam will find this news story useful.