www.garudabazaar.com

Shyam Singha Roy.. அடேயப்பா! உலக லெவல்ல இந்த Cataegory-ல 3வது இடம்.. கெத்து காட்டுதே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Naani, Sai Pallavi: தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் 'நேச்சுரல் ஸ்டார்' நானி. பிரேமம் படத்தின் மூலம் பிரபலமாகி, தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.

Shyam Singha Roy 3rd top non english global netflix films

ஷியாம் சிங்கா ராய்

இவர்கள் இருவரது நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி, திரையரங்கி, வெளியான திரைப்படம் ஷியாம் சிங்கா ராய்.  Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார்.

நாயகன் நானி

இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இது என கூறப்படுகிறது.  எஸ்.எஸ்.ராஜமௌலியின் நடிப்பில் உருவான ‘நான் ஈ (தெலுங்கில் ஈகா)’ போன்ற திரைப்படங்களின் மூலம் நடிகர் நானி தமிழ் மொழிகளில் நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக நிமிர்ந்து நில் உள்ளிட்ட சில நேரடி தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன்

இந்நிலையில் நடிகர் நானி 2 வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மறுபிறவியை மையமாக கொண்டு தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி, கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் நானியுடன் சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸில் ஷியாம் சிங்கா ராய்

இந்நிலையில் உலக அளவிலான ஆங்கிலம் அல்லாத உலக மொழிப் படங்களின் பட்டியலை, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. ஆம், திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சிங்கா ராய் திரைப்படத்தை பிரபல ஓடிடி ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான ஒளிபரப்பு செய்துவருகிறது.

டாப் 3-வது இடம்

இந்நிலையில் தான் நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ள ஆங்கிலம் அல்லாத உலக மொழிப் படங்களின் வரிசைப்பட்டியலில், ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் 3-வது இடத்தினை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த அளவுக்கு இந்த திரைப்படம் உலக பார்வையாளர்களையும் கவனிக்க வைத்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது என்று சொல்லலாம்.

Also Read: “நான் Dating-ல இல்ல.. குங்குமம் Shoot-க்காக.. Pregnant-ஆ?”.. Serial-ஐ விட்டு விலகினக்கு இதெல்லாம் காரணமா?.. கடுப்பான நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Shyam Singha Roy 3rd top non english global netflix films

People looking for online information on Nani, Netflix, Sai Pallavi, Shyam Singha Roy, SSR will find this news story useful.