''டீக்கடைல பக்கத்துல இருக்கவன் இருமினான்...'' பிரபல நடிகரின் போஸ்ட் செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி , சிவா ஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஓ மை கடவுளே திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14 வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஷிவா ஷாரா ஓ மை கடவுளே ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்து கொரோனா வைரஸ் குறித்து பதிவு | Shiva Shahra shared a Oh My Kada

இந்த படத்தை ஆக்செஸ் ஃபிலிம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங்கின் நண்பராக வரும் ஷாராவின் நடிப்பு வெகுவாகப்பாராட்டப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க்தில், ''ஓ மை கடவுளே பட காட்சி ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்து, டீக்கடைல பக்கத்துல இருக்குறவன் இருமினான், My reaction - அடியே கொரோனா யாருடி நீ ''என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor