LIGER D Logo Top
www.garudabazaar.com

ராம் சரண் நடிக்கும் RC15.. ஷூட்டிங் எப்போ? எந்த ஊர்ல? ஷங்கர் கொடுத்த அதிரடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் - ராம் சரண் இணையும் RC 15 படத்தின் படப்பிடிப்பு தகவலை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

Shankar Ram Charan RC15 Movie Shooting Update

Also Read | ஷாருக்கான் & தீபிகா படுகோன் நடிக்கும் 'பதான்'.. தெறியான ஜான் ஆபிரகாம் கேரக்டர் லுக் போஸ்டர்!

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார்.  ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தையும், ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.

இதில் RC15 படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

Shankar Ram Charan RC15 Movie Shooting Update

இந்நிலையில் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நேற்று முதல் துவங்கி உள்ளார். இதனால் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்களை அறிவித்துள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம், இந்தியன் 2 &  #RC15 படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடக்கும்.  #RC15 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஐத்ராபாத் & விசாகப்பட்டினத்தில் நடைபெறும்" என ஷங்கர் கூறியுள்ளார்.

Shankar Ram Charan RC15 Movie Shooting Update

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Shankar Ram Charan RC15 Movie Shooting Update

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.

 

Also Read | பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் GOLD.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய 'வலிமை' வினியோகஸ்தர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shankar Ram Charan RC15 Movie Shooting Update

People looking for online information on Ram Charan, RC15 Movie, RC15 Movie Shooting Update, Shankar will find this news story useful.