லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
தற்போது நடிகை சயீஷா நடிக்கும் காட்சிகள் முழுவதும் நிறைவடைந்ததாக செய்தி வெளியாகியது. இதை தொடர்ந்து நடிகை சயீஷா புனித் ராஜ்குமாரின் யுவ்ரத்னா படத்திலும், ஆர்யா நடிக்கும் டெட்டி படத்திலும் கலந்துகொள்ளவிருக்கிறார்.