www.garudabazaar.com

அட.. ‘உடன்பிறப்பே’ .. ஜோதிகாவுக்கு இப்படி ஒரு ஸ்பெஷலான படமா? - Trailer குறித்த மாஸ் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா தங்களது சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Sasikumar Udanpirappu is Jyothika 50 th film trailer update

இந்த பட்டியலில், 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய 4 படங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில், கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் நடிக்க, சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்‘ஜெய் பீம்’ படம் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். பழங்குடியின தம்பதியரின் வாழ்வியலை பேசும் இந்த படத்தை  த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 2021-ல் நேரடியாக அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகிறது.

அண்மையில் தான், அதாவது 2021, செப்டம்பர் 24-ஆம் தேதி தான், இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்கிற படம் அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆனது.

பெற்ற பிள்ளை போல் வளர்த்த மாட்டை யாரோ களவாடிக்கொண்டு போக, அதனால் சிரமப்படும் எளிய விவசாய குடும்பத்தின் கதையை அரசியல் - நையாண்டி - நகைச்சுவை என இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். பிக்பாஸ் பிரபலமான ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் உடன்பிறப்பே. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில், ஃபேமிலி டிராமா ஜானரில் தயாராகியுள்ள 'உடன்பிறப்பே' என்கிற இந்த படம் அக்டோபர் 2021-ல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

இந்த படத்தை ‘கத்துக்குட்டி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படம் ஜோதிகாவுக்கு 50வது திரைப்படம் என்றும், இந்த விஷயம் இந்த படத்தின் வரவிருக்கும் ட்ரைலரில் குறிப்பிடப்பட்டு வெளியாகவுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

2000-க்கு பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து பல ரசிகர்களை சம்பாதித்த நடிகை ஜோதிகா, முன்னணி நடிகரான சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜோதிகா தற்போது பெண் மைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்.

அவ்வகையில் 36 வயதினிலே, காற்றின் மொழியில், ராட்சசி, ஜாக்பாட், நாச்சியார், பொன்மகள் வந்தாள், மகளிர் மட்டும் என பல படங்களில் நடித்த ஜோதிகா தற்போது சசிகுமாருடன் இணைந்து உடன்பிறப்பே படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார்.

Also Read: ஆசம்!! ரக்‌ஷன் பாட்டுக்காக.. டிஸ்கோ டிரெஸ்ல நம்ம GP முத்து வேற லெவல் நடன ஒத்திகை!...Video

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar Udanpirappu is Jyothika 50 th film trailer update

People looking for online information on 2D Entertainment, Amazon Prime Video, Jyothika, Suriya, Trending, Udanpirappe will find this news story useful.