மீண்டும் 'அசுரன்' புரொடியூசருடன் தனுஷ் இணையும் படத்தின் அப்டேட் சொன்ன சந்தோஷ் நாராயணன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

Santhosh Narayanan Tweet about Dhanush and Mari Selvaraj Film

இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.  இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.

இந்த படத்துக்கு கர்ணன் என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடிக்கவிருக்கிறார்.  இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் படத்துக்கான பாடல் தயாரிப்பு பணிகளை தொடங்கியிருக்கிறேன். தென் தமிழகத்தின் நாட்டுப்புற பாடகர்கள் இந்த படத்தில் பணிபுரியவிருக்கிறார்கள்.  தாணு சார் மற்றும் என்னுடைய குழுவினருக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.