Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

Santhanam : அட்ரா சக்க.. first time நடிகர் சந்தானம் பாடிய பாட்டு...!! வெளியான Single Teaser!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி வெற்றி பெற்றவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர்.

Santhanam first time singing Kick Saturday Is Cominguuu Single

சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். முதலில் காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடி ஜானர் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் ஆக்‌ஷன், காமெடி, ரொமாண்டிக் என ஜனரஞ்சகமாக தமது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவரது படங்களுக்கெனவே ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளனர்.

சந்தானத்தின் நடிப்பில் அண்மை காலங்களில் ஏ1, டிக்கிலோனா, பிஸ்கோத்து, பாரீஸ் ஜெயராஜ், சபாபதி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்தன. கடைசியாக ஆடை, மேயாத மான் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், சந்தானம் நடித்த குலுகுலு திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சந்தானம் தன் வழக்கமான கலாய் , கவுண்ட்டர் ஃபார்முலாவில் நடிக்காமல் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'கிக்' என்று பெயரிடப்பட்டது. இப்படத்தின் மூலம், பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கியவர். இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

“வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில்  வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது” என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை, முதல்முறை ராகினி திவேதியுடன் இணைந்து நடிகர் சந்தானம் பாடியிருக்கிறார். இது தொடர்பான நகைச்சுவையான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் பாடியுள்ளதாலேயே இந்த பாட்டு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  Saturday Is Cominguuu என தொடங்கும் இந்த பாடலின் முழு நீள லிரிக் வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam first time singing Kick Saturday Is Cominguuu Single

People looking for online information on Kick, Santhanam, Saturday Is Cominguuu Single will find this news story useful.