BREAKING : சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுவா? விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 30, 2019 01:29 PM
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியான 'ஏ1' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படத்தை ஜான்சன் இயக்கியிருந்தார்
![Santhanam and R.Kannan New Movie Titled Vithaikkaran Santhanam and R.Kannan New Movie Titled Vithaikkaran](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/santhanam-and-rkannan-new-movie-titled-vithaikkaran-news-1.png)
அதனைத் தொடர்ந்து 'டகால்டி' படத்தில் அவர் நடித்து வருகிறார்.இப்படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை', 'பூமராங்' படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் எங்களை கிடைத்த தகவலின்படி இப்படத்தின் பூஜை வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கி தொடர்ச்சியாக 45 நாள் நடக்க உள்ளதாகவும் . மேலும் இப்படத்திற்கு 'வித்தைக்காரன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.