www.garudabazaar.com

"நீ ஷெர்லாக் ஹோம்ஸ் இல்ல ".. சந்தானம் நடிக்கும் "AGENT கண்ணாயிரம்" படத்தின் கலகலப்பான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ளது.

Santhanam Agent Kannayiram Movie Trailer Released

Also Read | இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆகப்போறது யாரு..? பரவும் தகவல்கள்.. Bigg Boss 6 Tamil

2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'.

இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம்  நடிக்கிறார்.

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் கடந்த 2021 பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடங்கியது. பின்னர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு  நிறைவு பெற்றது.

Santhanam Agent Kannayiram Movie Trailer Released

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார்.  படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது.  சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

காமெடி த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி மற்றும் ஒடிடி உரிமத்தை முறையே பிரபல முன்னணி நிறுவனமான சன்டிவி & சன் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Santhanam Agent Kannayiram Movie Trailer Released

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று (11.11.22) வெளியாகி உள்ளது.  டிடெக்டிவ்வாக சந்தானம் டிரெய்லரில் தோன்றியுள்ளார். ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் (விஜய் டிவி புகழ்) உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை (முனிஷ் காந்த்) தனது மகளின் கொலையை  விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஒட்டி டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன. மேலும் டிரெய்லரில் பிரதான அம்சமாக நகைச்சுவை காட்சிகள் அமைந்துள்ளன.  டிரெய்லரின் 1-வது  நிமிடத்தில் "டிராக் பன்ற அளவுக்கு நீங்க ஒன்னும் ஷெர்லாக் ஹோம்ஸ் இல்ல"  என நடிகை ரியா சுமன் பேசும் வசனமும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

 

Also Read | பாரதி கண்ணம்மா முடிய போகுதா..?.. சீரியல் குழுவினர் வெளியிட்ட கலக்கலான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Agent Kannayiram Movie Trailer Released

People looking for online information on Agent Kannayiram Movie, Agent Kannayiram Movie Trailer, Santhanam will find this news story useful.