www.garudabazaar.com

'அந்த' விஷயத்துல இவங்கள பாராட்டியே ஆகணும்... சனமிற்கு 'எகிறும்' ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சனமிற்கு பிறந்தநாள் கேக் அனுப்பவில்லை என்றால் போராட்டம் செய்வோம் என ஆர்மிக்காரர்கள் எச்சரித்தது காதில் விழுந்திருக்கும் போல. பிக்பாஸ் நேற்று சனம் பிறந்தநாளுக்கு கேக்கை அனுப்பி வைத்து அவரது ரசிகர்களை கூல் செய்து விட்டார். கேக் அனுப்பி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய பிக்பாஸ் சனமிற்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக வீடியோ ஒன்றையும் அனுப்பி போட்டு காட்டினார்.

Sanam Shetty speaks Tamil in Bigg Boss House, fans Praised

ஆனால் வீலிங் விளையாட்டில் சனமிற்கு எலுமிச்சை வந்தது என்ன ராசி என தெரியவில்லை. இதெல்லாம் பிக்பாஸின் சதியா? இல்லை வேறு எதுவும் உள்நோக்கமா என்று ஆர்மி தீவிர ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றனர். ஆனால் அதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு அவர் எலுமிச்சையை எடுத்தது சிறப்பு. இந்த நிலையில் ரசிகர்களின் ஆதரவு சனமின் பக்கம் கொஞ்சம் அதிகமாகவே திரும்பி உள்ளது. வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதில் தமிழ் தெரிந்தவர்கள் தான் ஏராளம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுகின்றனர். அதே நேரம் சனமின் தாய்மொழி தமிழ் இல்லை என்றாலும் கூட, அவர் தமிழில் உரையாடுவது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறதாம். மேலும் யார் ஆதரவு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர் தன்னுடைய ஆட்டத்தை நன்றாகவே ஆடுகிறார் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Sanam Shetty speaks Tamil in Bigg Boss House, fans Praised

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.