சிலம்பாட்டம் ஹீரோயின், Boy Friendடுடன் ப்ரேக்-அப் – ’***** உன் பேர சொல்லாம விடமாட்டேன்!’
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்தவர் சனா கான். தமிழில் இவர் சிம்புவுடன் நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் இவருக்கு தமிழில் நல்ல ஓப்பனிங் கொடுத்திருந்தாலும், அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் பெரிய பெயர் வாங்கித்தரவில்லை. கடைசியாக தமிழில் நடித்த படம் விஷாலின் ’ஐயோக்யா’.
ஆனால் இந்தி சினிமாவில் இவருக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. அங்கு பல படங்களில் நடித்து வந்த அவர் மெல்வின் லூயிஸ் என்ற பாலிவுட் நடனகர்த்தாவிடன் காதல்வயப்பட்டார். நெடுங்காலமாக இருவரும் காதலாக பழகி வந்த நிலையில், சனா கான் இன்று ஒரு அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.
இதில் தன் ஆண் நண்பர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதில் சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணை குறிப்பிட்ட அவர், விரைவில் அவர் பெயரை வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.