“‘ஜானு’ ரொம்ப சவாலா இருந்தது” - ‘96’ தெலுங்கு ரீமேக் குறித்து நடிகை சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ரீமேக்காகி வரும் விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Samantha wrapped shoot for 96 movie official telugu remake

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதல், நட்பை நினைவுப்படுத்தும் விதமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ராமசந்திரன்(ராம்), த்ரிஷா நடித்திருந்த ஜானகி தேவி(ஜானு) என்ற கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில், கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் பாவனா நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும், ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் இணைந்து நடித்துள்ளனர். ‘ஜானு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘மற்றொரு ஸ்பெஷல் படம் எனக்கு. முன்பு இருந்ததை விட என்னை சிறந்தவளாக மாற்றிய சவாலான கேரக்டர். இந்த ஜானு கனவு குழுவில் அங்கமாக இருந்த இயக்குநர் பிரேம் மற்றும் ஷர்வானந்திற்கு நன்றி’ என ட்வீட் செய்துள்ளார்.