Udanprape others
www.garudabazaar.com

‘வேற மாரி அப்டேட்’!.. சமந்தா நடிக்கும் அடுத்த படம் .. மாஸாக வெளியான அறிவிப்பு..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாக  தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த  வேளையிலும், அதை கடந்து தனது கேரியரில் கவனம் கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

samanatha next film dream warrior pictures Shantharuban

ஆம், இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடப்படாத இரண்டு புதிய படங்களில்  ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு சமந்தா அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.

அதில் ஒன்றுதான், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் உருவாகும் படம். இந்த படம் வித்தியாசமான திரைக் கதையாக உருவாகிறது. 

இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரனிடம் நாம் கேட்டபோது, “இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஹீரோயினுக்கான படமாக இருக்கும்” என்றும் “ரொமாண்டிக் ஃபேண்டஸி” வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர்  சாந்தரூபன் ஞானசேகரன் பிஹைண்ட்வுட்ஸ் குறும்பட விழாவில் விருதுபெற்ற GREY என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

samanatha next film dream warrior pictures Shantharuban

இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கி பிஹைண்ட்வுட்ஸில் வெளியான GREY குறும்படத்தை இணைப்பில் காணலாம். #வாழ்த்துக்கள் சாந்தரூபன் ஞானசேகரன் Bro!

‘வேற மாரி அப்டேட்’!.. சமந்தா நடிக்கும் அடுத்த படம் .. மாஸாக வெளியான அறிவிப்பு..!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

samanatha next film dream warrior pictures Shantharuban

People looking for online information on Dream Warrior Pictures, Samantha, Samantha ruth prabhu, Samantha Upcoming movies, SamanthaNext will find this news story useful.