இசைஞானி இளையராஜாவின் குழுவில் இருந்த தபேலா கலைஞர் கண்ணையா காலாமானார். அவரது உடலுக்கு இளையராஜா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் 1976 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
46 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் அசைக்கமுடியாத ஜாம்பவானாக உள்ளார் இளையராஜா. இவரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது இளையராஜா திரையுலகுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே உடனிருந்தவர் கண்ணையா.
இளையராஜா இசைக்குழுவில் தபேலா கலைஞராக இருந்தவர் கண்ணையா. இளையராஜா இசையமைத்த ஏறத்தாழ அனைத்து படங்களிலும் தபேலா வாசித்தவர் கண்ணையா. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கண்ணையா இன்று காலமானார். சென்னையில் அவரது வீட்டில் வைக்கப்பட்ட கண்ணையாவின் உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். காலை 6 மணிக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இளையராஜா.