பிரபல ஹீரோவின் மகளுக்கு Kiss கொடுக்க முயன்ற ரசிகர்... பரபரப்பு சம்பவம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 04:35 PM
பிரபல பாலிவுட் ஸ்டார் சயீஃப் அலிகான் நடித்துள்ள 'தன்ஹஜி' இன்று முதல் (10.01.2020) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை அஜய் தேவ்கன், பூஷன் குமார், கிரிஷன் குமார் தயாரிக்க, ஓம் ரவுத் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சயீஃப் அலிகானுடன் இணைந்து அஜய் தேவ்கன், கஜோல் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சயீஃப் அலிகானின் மகள் சாரா அலி கான் 'கேதார்நாத்', 'சிம்பா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாரா அலி கானி்ன் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது சாராவிடம் ரசிகர் ஒருவர் கைகொடுத்தார். பின்பு அவரின் கையில் முத்தமிட முயன்றார். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாவலர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.