''எல்லா தர்பார்லயும் நீ தான் தலைவா'' - தமிழில் வாழ்த்திய சச்சின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 12, 2019 05:28 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![Sachin Tendulkar wished Rajinikanth to Birthday in Twitter Sachin Tendulkar wished Rajinikanth to Birthday in Twitter](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/sachin-tendulkar-wished-rajinikanth-to-birthday-in-twitter-photos-pictures-stills.jpg)
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று (டிசம்பர் 12) பிறந்தநாள் என்பதால் இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக God Of Cricket என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார். உங்களுடைய திரைக்கு முன் உங்கள் ஸ்டைல் மற்றும் திரைக்கு பின்னால் உங்களது பணிவு உங்களை எல்லா தர்பாரிலும் தலைவராக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir.
Your onscreen style and offscreen humility make you the ‘Thalaiva’ in every ‘Darbar’. pic.twitter.com/cIYZLJcjk9
— Sachin Tendulkar (@sachin_rt) December 12, 2019