IKK Others
MKS Others
www.garudabazaar.com

பிரம்மாண்டத்தின் உச்சம்! ‘வேற லெவலில்’ வெளியான #RRR படத்தின் மாஸ் டிரெய்லர்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR The Movie).

RRR Movie trailer is out SS Rajamouli Ram charan Junior NTR Video

DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான லைகா ஏற்கனவே வாங்கியிருந்தது.

இந்த நிலையில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என தமிழில் பெயரிடப்படடுள்ள இந்த தெலுங்கு மூலப் படம் பான் இந்திய படமாக பிரமாண்டமாக உருவாகியுள்ளதற்கு மற்றுமொரு பெரும் சாட்சியாக இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நிரூபித்துள்ளது.

டிரெய்லரில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் மிரட்டலான நடிப்புகள், கட்டுடல்கள், வீர தீர சாகச காட்சிகள் இடம் பெறுவதுடன் நாயகிகள் ஆலியா பட் மற்றும்  Olivia Morris ஆகியோரும் இடம் டிரெய்லரில் பெற்றுள்ளனர்.

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி, அஜய் தேவ்கன், நடிகை ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளனர். Alison Doody,  Ray Stevenson ஆகியோரும் இந்த திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர்.

V.விஜயேந்திர பிராசத் கதை எழுத, எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்தை இயக்கியுள்ளார். மகரத மணி இசையமைக்க, K.K.செந்தில் குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு சிரில் இப்படத்தின் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

இப்படத்தின் தமிழ் வசனத்தை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேற்படி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7-ஆம் தேதி, நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

RRR Movie trailer is out SS Rajamouli Ram charan Junior NTR Video

People looking for online information on ஆர் ஆர் ஆர் டிரெய்லர், ரத்தம்ரணம்ரவுத்திரம், Jr ntr, Maragathamani, Ram Charan, RRR Movie, RRR The Movie, RRRTrailer, SS Rajamouli will find this news story useful.