''தளபதி 64 கிளைமேக்ஸ்ல...'' - இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ட்வீட்டுக்கு பிரபல இயக்குநர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தலைநகர் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Rathna Kumar Comments to Director Lokesh Kanagaraj's Kaithi and Thalapathy 64

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், ஸ்ரீமன், பிரேம், விஜே ரம்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கைதிக்கு கிடைதத்த வரவேற்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''கைதி' வெற்றிகரமாக 25வது நாள். இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும்  நன்றி. அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி  நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் ரத்ன குமார், அப்படியே 'தளபதி 64' கிளைமேக்ஸ்ல என்ன Weapon  வரு போகுதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.