www.garudabazaar.com

EXCLUSIVE : "நான் இந்தி பொண்ணு இல்ல".. மனம் திறந்த நடிகை கிரீத்தி ஷெட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராம் பொத்தினேனி & கீர்த்தி ஷெட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி அளித்துள்ளனர்.

Ram Potheneni Krithi Shetty The Warriorr Exclusive Interview

'தி வாரியர்' படத்தில் ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார்,  கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டிரெய்லர்  ஜூலை 1 ஆம் தேதி  வெளியாகி உள்ளது. “தி வாரியர்” திரைப்படம்,  வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில்  பிரமாண்டமாக வெளியாகிறது.

Ram Potheneni Krithi Shetty The Warriorr Exclusive Interview

ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார்.

இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பவன் குமாரின் ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் ராம் பொத்தினேனி & கீர்த்தி ஷெட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி அளித்துள்ளனர். தி வாரியர்'படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். ராம் பொத்தினேனி & கீர்த்தி ஷெட்டி இருவரும் இயக்குனர் லிங்குசாமி பற்றியும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு பிடித்த படங்கள் பற்றியும் பேசினர்.

குறிப்பாக "கீர்த்தி ஷெட்டி இந்தி பொண்ணு ஆனால் தெலுங்கு பிரஸ்மீட்ல நல்லா தெலுங்குல பேசுறாங்க. இப்போ இந்த பேட்டியில் கூட தமிழ்ல  நல்லா பேசுறாங்க" என நடிகர் ராம் பொத்தினேனி கூறினார். இதற்கு பதில் அளித்த கீர்த்தி ஷெட்டி, "நான் துளு பெண்" என பதில் அளித்துள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, துளு நாடான மங்களூருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

EXCLUSIVE : "நான் இந்தி பொண்ணு இல்ல".. மனம் திறந்த நடிகை கிரீத்தி ஷெட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ram Potheneni Krithi Shetty The Warriorr Exclusive Interview

People looking for online information on Krithi Shetty, Lingusamy, Ram Potheneni, RAPO, The Warriorr will find this news story useful.