குட்டி கதை.. பெரிய ஸ்க்ரீன் - பிரபல தியேட்டரின் ஆல் ஷோஸ் இப்போ தளபதி விஜய் கன்ட்ரோல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் குட்டி கதை பாடல் குறித்து பிரபல தியேட்டர் செம அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ram muthuram cinemas announcement on master vijay kutti kathai

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு குட்டி கதை பாடல் இன்று மாலை வெளியாகிறது. இந்த நிலையில், குட்டி கதை பாடலை தியேட்டரில் ஒளிப்பரப்ப போவதாக ராம் முத்து ராம் சினிமாஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்த தியேட்டரின் ட்விட்டர் பதிவில், 'இன்று மாலை முதல், குட்டி கதை பாடல், அனைத்து ஷோவின் இன்டர்வெலின் போதும் திரையிடப்படும்' என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Entertainment sub editor