Pattamboochi

“பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்…” விஜயகாந்துக்கு சூப்பர்ஸ்டாரின் பிராத்தனை Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் அவர்களுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து விரல் நீக்கப்பட்டதாக கட்சி சார்பாக இன்று அறிக்கை வெளியானது.

Rajinikanth tweet about captain vijayakanth health

கேப்டன் விஜயகாந்த்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக 1980 கள் முதல் 2000 வர கலக்கியவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பையும் ஏற்று சிறப்பாக வழிநடத்தியவர் தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாக கடைசியாக விருதகிரி படத்தில் நடித்தார். அந்த படத்தை அவரே இயக்கவும் செய்தார். அதுபோல கட்சி சார்ந்த பணிகளிலும் அவர் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

உடல்நலப் பிரச்சனை…

சமீபத்தைய ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக 2014 ஆம் ஆண்டு  சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.  பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். உடல்நிலைக் காரணமாக இப்போது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் கேப்டன் விஜயகாந்த். அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆறுதலாக உள்ளன.

Rajinikanth tweet about captain vijayakanth health

அறுவை சிகிச்சை…

இந்நிலையில் இன்று தேமுதிக கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் விஜயகாந்த் விரைவில் குணமாகி வரவேண்டும் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

ரஜினிகாந்த் Tweet

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சகநடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth tweet about captain vijayakanth health

People looking for online information on Rajinikanth, Vijayakanth will find this news story useful.