அரசியலில் இணைவது குறித்து கமலின் பேச்சுக்கு ரஜினிகாந்த் அதிரடி கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் 60 விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Rajinikanth Speaks about Kamal Haasan's Politics Statement

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சென்ஜுரியன் யூனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல், அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது ரஜினியுடன் அரசியலில் பயணிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் கண்டிப்பாக சேர்ந்து பயணிப்போம்'' என்று பதிலளித்தார்.

இதனையடுத்து கமலின் பதில் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ''மக்களுடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்'' என்று குறிப்பிட்டார்.