"டியர் மோடிஜி, நீங்க சாதிச்சிட்டீங்க" - ரஜினிகாந்த் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மத்தியில் ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rajinikanth Congratulates PM Narendra Modi - Lok Sabha Election Results

இந்தியா முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் 542 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக 350 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், பிற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி தனித்து 301 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனித்து 50 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள்; கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.