சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' படத்துக்கு சென்னையில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 10:55 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலை முன்னிட்டு நேற்று (09.01.2020) வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் அனிருத்தின் பாடல்கள் படத்துக்கு மிகப் பெரும் பலமாக அமைந்திருந்தது. தளபதிக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் சந்தோஷ் சிவன் இந்த படத்தில் இணைந்திருந்தார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் சென்னை சிட்டியில் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி இந்த படம் சென்னையில் முதல் நாளில் 2.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.