www.garudabazaar.com

பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்.. மாப்ள இவரா? படு Viral ஆகும் Trending ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் செம ஹிட் ஆன சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி முதல் சீசன் சீரியலில் நடித்து கலக்கியவர் அன்ஷு ரெட்டி.

rajaraani serial actress announced marriage ராஜா ராணி நடிகை

இவருக்குத்தான் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சினிமா மற்றும் டிவி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் ரசிகர்கள் பலரும் அன்ஷு ரெட்டியின் வருங்கால கணவர் யார் என்று கேட்டு கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

விஜய் டிவி ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீரியலின் 2வது சீசன் வெற்றிகரமாய் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது சித்து மற்றும் ஆல்யா மனசா நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல் சீசனில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றவர் அன்ஷு . இந்த சீரியலை அடுத்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற இவர், பின்னர் பல தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதேபோல் தெலுங்கில் அன்ஷு ரெட்டி நடித்த காதலோ ராஜகுமாரி சீரியல் (Kathalo Rajakumari) மிகவும் பிரபலமானது.

இந்நிலையில்தான் அன்ஷு ரெட்டி தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். அதன்படி அன்ஷு ரெட்டி, சௌமித் ரெட்டி என்பவருடன் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரவிருக்கும் இவர்களின் திருமணத்துக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அடடா..!! 1140 எபிசோடுகளை கடந்த பிரபல சீரியல்.. விரைவில் முடியப் போகும் சோகத்தில் ரசிகர்கள்!

rajaraani serial actress announced marriage ராஜா ராணி நடிகை

People looking for online information on RajaRaani, RajaRaani2, Rajarani, TVActress, TVSerial will find this news story useful.