Breaking: காஞ்சனா 3க்கு பிறகு 3டியில் உருவாகும் சூப்பர் ஹீரோ படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 24, 2019 12:05 PM
ராகவா லாரன்ஸ் இயக்கி ஹீரோவாக நடித்து கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான படம் காஞ்சனா 3. இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தை நடித்து இயக்க விருக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறதாம்.
தற்போது அவர் தனது காஞ்சனா படத்தை லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.
Tags : Raghava Lawrence, Kanchana 3, Sun pictures