'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 08, 2019 12:23 AM
சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நிகழ்வில் படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ''சாங்க்ஸ் எக்ஸ்டிரார்டினரியா இருக்கு. ஏ.ஆர்.முருகதாஸ் சார் உங்க படத்துல மெசேஜ் எதிர் பார்க்குறேன். இந்த காலக்கட்டத்துல தலைவர் ஓட காம்போ பன்றது பெரிய விஷயம்.
அதிசயம் அற்புதம்னு தலைவர் சொன்னதும் தமிழ்நாடே அதிருது. அவர் கட்சியை அறிவித்த பிறகு எல்லோர் பேரையும் சொன்னாரு. ஸ்டாலின் சார்லேர்ந்து இன்னொருத்தர் அவர் பேர் சொல்ல புடிக்கல. 1996 ஆம் ஆண்டு தலைவர் அரசியலுக்கு வந்திருக்கணும்னு சொல்றாங்க. பதவிய வேணாம்னு சொன்னவர் பாத்திங்களா.
கருணாநிதி ஐயா இறந்த அப்போ ஸ்டாலின் சார் கோர்ட்டுக்கு போய் பீச்ல இடம் கொடுத்தாங்க. அப்போ ஸ்டாலின் சார் சீம் ஆனா நல்லா இருக்குமேனு நினச்சேன். எடப்பாடி பழனிசாமி நல்லா இறங்கி செய்யறார். நல்ல முதல்வர்னு நெனச்சேன். ஒரு தலைவரின் ரசிகரா எல்லோரையும் வாழ்த்துவேன்.
ஆனா ஒருத்தர் இருக்காரு. எல்லாத்துக்கும் நெகட்டிவாவே பேசறார். என் தலைவன தாக்கி தா நீ பேர் வாங்குற. இனிமே என் தலைவர பத்தி தப்பா பேசுன...ஒரு ரசிகனா நான் கேட்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.