www.garudabazaar.com

BOX OFFICE: புஷ்பா 300 கோடி வசூல் சாதனை.. இந்திய சினிமாவில் 2021-ல் வெளியான படங்களில் முதலிடம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

HYDRABAD: 300 கோடிக்கும் மேல் வசூலித்து புஷ்பா படம் சாதனை படைத்துள்ளது.

Pushpa rampage at the India Box Office 300 Cr Collection

போடு! "காத்து வாக்குல ரெண்டு காதல்" .. அடுத்த SINGLE எப்போ தெரியுமா? செம அப்டேட்.!

PAN INDIA - Pushpa

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Pushpa rampage at the India Box Office 300 Cr Collection

புஷ்பா வசூல் மழை

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Pushpa rampage at the India Box Office 300 Cr Collection

Pushpa The Rise Box Office

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.  இதனை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது. இதனை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் புஷ்பா திரைப்படம், 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Pushpa rampage at the India Box Office 300 Cr Collection

People looking for online information on Allu Arjun, Pushpa, Pushpa Box Office, Pushpa The Rise, Rashmika, Samantha, Sukumar will find this news story useful.