www.garudabazaar.com

'தளபதி 66' குறித்து விஜய் சொன்ன சீக்ரெட்.. "இப்டி ஒரு 'ஃபேமிலி' கதை கேட்டு 20 வருஷம் ஆச்சு.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

producer dil raju speaks about thalapathy 66 movie

விஜய் நடிப்பில், அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், இத்திரைப்படைத்தை இயக்கியுள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், நெல்சன் படத்தில் வழக்கமாக வரும் பல நட்சத்திரங்கள் பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

பீஸ்ட் மீதான எதிர்பார்ப்பு

அது மட்டுமில்லாமல், படத்தின் முதல் பாடலும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'மாஸ்டர்', 2021 ஆம் ஆண்டின் நம்பர் 1 வெற்றிப் படமாக அமைந்திருந்தது.

producer dil raju speaks about thalapathy 66 movie

அதே போல, நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படமும், பெரிய ஹிட்டடித்திருந்தது. அப்படிப்பட்ட இரண்டு பேர் இணையும் பீஸ்ட் திரைப்படமும், இந்த ஆண்டின் சிறந்த படமாக அமையும் என விஜய் ரசிகர்கள், உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தளபதி 66

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில், விஜய் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 66 ஆவது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை, தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள், நடிகர் விஜயுடன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

producer dil raju speaks about thalapathy 66 movie

20 வருஷம் ஆயிடுச்சு

படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு, விஜய் 66 படம் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சில அசத்தல் தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார்.

producer dil raju speaks about thalapathy 66 movie

'விஜய்யின் திரைப்படத்தின் படப்பிடிப்பை, மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதையைக் கேட்ட விஜய், இந்த மாதிரி ஒரு 'ஃபேமிலி' ஸ்க்ரிப்ட்டைக் கேட்டு 20 ஆண்டுகள் ஆகிறது எனக் கூறினார். கொரோனா பரவலின் அடிப்படையில், படத்தினை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுளோம்' என தெரிவித்துள்ளார்.

 

 

எகிறும் எதிர்பார்ப்பு

தளபதி 66 குறித்து பெரிதாக அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தயாரிப்பாளரின் இந்த தகவல், விஜய் ரசிகர்களை திக்கு முக்காடச் செய்துள்ளது.

producer dil raju speaks about thalapathy 66 movie

அதே போல, 20 ஆண்டுகளுக்கு பிறகு, சிறந்த ஃபேமிலி ஸ்க்ரிப்ட் ஒன்றைக்  கேட்டதாக விஜய் தெரிவித்துள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போதே அதிகரித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

producer dil raju speaks about thalapathy 66 movie

People looking for online information on Beast, Dil Raju, Doctor Tamil, Master Tamil, Nelson Dilipkumar, Pooja Hegde, Thozha, Vamsi Paidipally, Vijay will find this news story useful.