www.garudabazaar.com

"டாக்டர்" பட பிரியங்கா மோகன், அடுத்து நடிக்கும் படத்தில் இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன்.

Priyanka Mohan female lead for Jayam Ravi - SMS Rajesh

தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோவுடன் ஜோடி சேர உள்ளார்.

Priyanka Mohan female lead for Jayam Ravi - SMS Rajesh

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தை ராஜேஷ் இயக்க உள்ளார். இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் இந்நிறுவனம் தடம் பதித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இடியட் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் சாணி காயிதம் படம் அமேசான் பிரைம் வெளியீட்டுக்கு தயராகி உள்ளது.

Priyanka Mohan female lead for Jayam Ravi - SMS Rajesh

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படமான அகிலன் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

Priyanka Mohan female lead for Jayam Ravi - SMS Rajesh

இந்நிலையில் ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாக உள்ளது.  இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

ஜெயம் ரவி கடைசியாக பூமி படத்தில்  நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

"டாக்டர்" பட பிரியங்கா மோகன், அடுத்து நடிக்கும் படத்தில் இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Mohan female lead for Jayam Ravi - SMS Rajesh

People looking for online information on Jayam Ravi, JR30, Priyanka Mohan, Rajesh will find this news story useful.