நடிகர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவி 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
![Prabhudeva-Tamannaah Bhatia's Devi 2 Trailer has been released Prabhudeva-Tamannaah Bhatia's Devi 2 Trailer has been released](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/prabhudeva-tamannaah-bhatias-devi-2-trailer-has-been-released-photos-pictures-stills.jpg)
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி’ திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தேவி 2’ என்ற தலைப்பில் இயக்கியுள்ளார். இதில், முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் இந்த பாகத்தில் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிலிம்ஸ் சார்பில் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் சிங்கிள் மற்றும் டீசர் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் முதல் பாகத்தில் வந்த ரூபி பேயுடன் புதிதாக ஒரு பேயும் சேர்ந்துக் கொண்டு அலப்பறை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படம் கோடை விடுமுறையையொட்டி வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“அவளுக்கு பேய் புடிக்கல.. பேய் தான் அவள புடிச்சி வச்சிருக்கு”- தேவி 2 டிரைலர் இதோ! வீடியோ