www.garudabazaar.com

பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ Firstlook.. இணையும் பிக்பாஸ் நடிகை உட்பட 2 ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் - இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'பொய்க்கால் குதிரை'.

Prabhudeva Poikkal Kuthirai FL female lead raiza and varalaxmi

நடிகர், இயக்குநர், 'நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'பொய்க்கால் குதிரை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.

Prabhudeva Poikkal Kuthirai FL female lead raiza and varalaxmi

'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், 'இரண்டாம் குத்து' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவரும்தான் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் தான் 'பொய்க்கால் குதிரை'. இந்தப்படத்தில் பிரபுதேவா நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் 'பிக்பாஸ்' பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்.

ஆக்ஷன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்கிற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

Prabhudeva Poikkal Kuthirai FL female lead raiza and varalaxmi

அண்மையில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியிடப் பட்டிருக்கிறது.

ALSO READ: சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு விரைவில் டும்டும்டும்!!.. அவரே சொன்ன அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Prabhudeva Poikkal Kuthirai FL female lead raiza and varalaxmi

People looking for online information on Prabhudeva, Raiza Wilson, Santhosh Peter Jayakumar, Varalaxmi Sarathkumar will find this news story useful.