தளபதி விஜய் ஸ்டைலில் பிரபல இயக்குநரின் மகளின் டிக் டாக் வீடியோ - செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலமான சினிமா டயலாக்குகளை ரசிகர்கள் பலர் டிக் டாக் வீடியோவாக செய்து வருகின்றனர். மேலும் தற்போதைய சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து செய்யப்படும் டிக்டாக் வீடியோக்களும் வைரலாகிறது.  அவை அவ்வப்போது வேற லெவல் வைரலாகி வருகிறது.

பல பிரபலங்களும் டிக் டாக் வீடியோக்கள் வெளியீட்டு வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஷாந்தனு உள்ளிட்டோர் தாங்கள் டிக் டாக்கில் இணைந்துள்ளதாக அறிவித்து சில வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பிரபு சாலமனின் மகள் ஹாசல் ஷைனி தனது டிக் டாக் வீடியோக்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட அது மிகவும் வைரலாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹாசெல் ஷைனி தற்போது 'சச்சின்' பட டயலாக்கை டிக் டாக் வீடியோவாக செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர தற்போது அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

Entertainment sub editor