'காதலன் ரிட்டர்ன்ஸ்' : பிரபுதேவாவின் புதிய படம்.. இயக்குநர் பேரை கேட்டா ஆடி போயிடுவீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரபுதேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

prabhu deva to join hands with AAA fame adhik ravichandran

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடண இயக்குநராகவும் இருப்பவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சங்கர் இயக்கிய காதலன் படம் பிரபுதேவாவை தமிழகமெங்கும் கொண்டு சென்றது. இதையடுத்து இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதை தொடர்ந்து டைரக்‌ஷன் பக்கம் திரும்பிய பிரபுதேவா, விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கினார். மேலும் ஹிந்தியில் அக்‌ஷய் குமார், சல்மான் கான் ஆகியோரின் படங்களையும் இவர் டைரக்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழில் பிரபுதேவா அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். முற்றிலும் புதிய வகையான கதை களத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட தகவல்கள் படக்குழுவின் சார்பில் விரைவில் வெளியாகவுள்ளன.

Entertainment sub editor