Corona : பிரசவ வலியில் துடித்த ஏழை பெண் - பிரசவம் பார்த்த எழுத்தாளர் - ஆண்களின் நெகிழ்ச்சி சம்பவம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை  வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழை எளிய மக்கள் தான்.

பிரசவ வலியில் துடித்த ஏழை பெண் பிரசவம் பார்த்த எழுத்தாளர் Popular writer visaranai fame writer does delivery for a poor women amidst Corona lockdown

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல  விருதுகளை வென்ற 'விசாரணை' படம் 'லாக்கப்' என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் சந்திரசேகர் பற்றி தான் தற்போது எல்லோரும் பேசி வருகின்றனர். கோவை சிபிஐ கட்சி சார்பில் அவர் ஒடிசாவில் இருந்து தமிழகத்தில் வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவளித்து வருகிறார்.

அப்படி தன மகள் ஜீவாவுடன் உணவு கொடுக்க சென்றபோது. அங்கு இருந்த பெண் ஒருவருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. இதனால் செய்வதறியாது தவித்த அங்கு இருந்த எழுத்தளாரும், சில ஆண்களும் சேர்ந்து அந்த ஏழை பெண்ணிற்கு பிரசவம் பார்த்து உள்ளனர். பின்பு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தொப்புள் கொடியை வெட்டி தாய் சேய்க்கு தேவையான் உதவிகளை செய்திருக்கின்றனர். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பற்றி மகள் ஜீவா முகநூல் பதிவு இட்டுள்ளார். கொடூர நோயை தாண்டியும் மனிதம் வளரும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

CORONA : பிரசவ வலியில் துடித்த ஏழை பெண் - பிரசவம் பார்த்த எழுத்தாளர் - ஆண்களின் நெகிழ்ச்சி சம்பவம்.! வீடியோ

Entertainment sub editor