புகழ்பெற்ற நடிகர் காலமானார்.... அடுத்தடுத்து மரணிக்கும் கலைஞர்கள்... சோகத்தில் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபகாலமாகவே திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வரும் வேளையில் அடுத்த சோக செய்தி மக்களை தாக்கியுள்ளது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜெர்ரி ஸ்டில்லர் தற்போது மரணம் அடைந்துள்ளார். இவர் தனது ஆக்ரோஷமான கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர்.
இவரது மகன் பென் ஸ்டில்லர் இன்று ஹாலிவுட்டின் காமெடி சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார். நடிகர் ஜெரிக்கு வயது 92. இயற்கை முறையில் மரணம் அடைந்தார். இவர் தனது மனைவி மற்றும் இரு குழ்நதைகளுடன் வாழ்ந்து வந்தார். இவரது மகளும் பிரபல நடிகையாவார்.. இவர் தனது குடும்ப வாழ்க்கை பற்றி எழுதிய சுயசரிதை "Married to Laughter" மிகப் பெரிய வெற்றி அடைந்து, வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் பல விருதுகளை பெற்ற புகழ்பெற்ற கலைஞரின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
I’m sad to say that my father, Jerry Stiller, passed away from natural causes. He was a great dad and grandfather, and the most dedicated husband to Anne for about 62 years. He will be greatly missed. Love you Dad. pic.twitter.com/KyoNsJIBz5
— Ben Stiller (@RedHourBen) May 11, 2020