பிரபல நடிகையை மணக்கிறாரா நடிகர்... இந்த நேரத்தில் திருமணத்தை எப்படி நடத்துவது?-சூசகமான பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியான அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அராரோ திருமணம் பற்றிய கேள்விகளுக்கு நடிகர் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தயாரிப்பாளர் போனி கப்பூரின் மகனான அர்ஜுன் கபூர்  Ki & Ka, 2 States, Finding Fanny போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். இவரும் நடிகை மலைக்காவும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி பரவி வந்தது. முதலில் மறுத்த இருவரும் பின்பு உண்மையை ஒப்புக்கொண்டார்கள்.

பிரபல நடிகையுடன் திருமணம் பற்றி நடிகர் சூசகமான பதில் Popular star actor about his marriage with actress after corona lockdown

இதனையடுத்து குஷியான ரசிகர்கள் இபோது திருமணம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதனையடுத்து நேற்று லைவில் வந்த நடிகரிடம் மீண்டும் ரசிகர்கள் இதுபற்றி கேட்க, "நாங்கள் திருமணம் செய்ய விரும்பினாலும் இப்போது எப்படி முடியும். திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக ரசிங்கர்களுக்கு சொல்லுவேன். இப்போது எந்த திட்டமும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் "என்னுடன் வாழ்வது அத்தனை சுலபமல்ல. அவரின் பொறுமையால் தான் என்னை ஜெயிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor