கொரோனா நேரத்தில் 'பிக்னிக்' சென்ற சிம்பு, தனுஷ் ஹீரோயின்... வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு சினிமாவில் 2010ஆம் ஆண்டு 'லீடர்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். அந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின்பு வெகு சீக்கிரத்தில் தமிழில் டாப் ஸ்டார்களான தனுஷ் மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்தார். தமிழில் அவருக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் அது 'மயக்கம் என்ன' தான். தனுஷுடன் இணைந்து அவர் நடித்த அந்த கேரக்டர் அவருக்கு மிகுந்த பாராட்டுகளை பெற்று தந்தது. இந்நிலையில் தனது கல்லூரி நண்பர் ஜோ என்பவரை மணந்து அவர் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா நேரத்தில் சுற்றுலா சென்றதாக அவர் பதிவிட்டுள்ளார். அது பற்றிக் கூறும் போது "வீட்டிற்குள்ளேயே வாரக்கணக்கில் அடைந்து இருப்பதால் மகிழ்ச்சி இல்லை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் இருக்குமிடம் சமூக இடைவெளியை பின்பற்றக் கூடிய அளவில் இருக்கிறது. எனவே தான் என் கணவர் ஒரு ஒரு சிறிய சுற்றுலாவை ஏற்பாடு செய்தார். எங்கள் வீட்டு பின்னால் இருக்கும் கடற்கரையில் ஒரு நீண்ட பயணமும், மீன் மீன் பிடிக்கும் படலமும் நடைபெற்றது. பின்பு வீட்டுக்கு திரும்பினோம். இப்படி ஒரு சொர்கத்தை வீட்டுப் பின்புறத்தில் வைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உலகத்தில் சிறந்த மனிதர் எனது கணவராக வாய்த்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.