www.garudabazaar.com

சீரியல் பிரபலங்கள் கலக்கும் 'வார்டு 126'.. முக்கிய கேரக்டரில் சோனியா அகர்வால்.. 'த்ரில்லர்' டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

SSB டாக்கீஸின் முதல் தயாரிப்பில், இயக்குநர் சாய் செல்வா இயக்கத்தில் ‘வார்டு-126’ எனும் திரைப்படம் பெண்மையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

popular serial actors starring female centric ward126 SSB Talkies

‘வார்டு-126’ எனும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் சென்னை, நொய்டா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகனாக மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனனும், நாயகிகளாக ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன், நிஷாந்த், தீபா ஷங்கர், வினோத் சாகர், கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் SK சுரேஷ்குமார் ஒளிப்பதிவில், வருண் சுனில் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக அமைந்துள்ளதாக இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் டீசரை, இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் உட்பட பல பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். 

ALSO READ: பிரபல யூடியூபர் இயக்கும் "அருள்நிதி15"!!.. ‘அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிய’ தயாரிப்பு நிறுவனம்!

popular serial actors starring female centric ward126 SSB Talkies

People looking for online information on Chandini Tamilarasan, Sonia Agarwal, Vidya Pradeep will find this news story useful.