Fakir Other Banner USA

பிரபல தயாரிப்பாளர் பி.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய மல்டிநேஷனல் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான பிரமிட் சாய்மிரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பி.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.

Popular Producer, Distributor P.S.Swaminathan the founder of Pyramid Saimira Passes away today

நீண்ட நாட்களாக நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பி.எஸ்.சுவாமிநாதன் அதிகாலை 2.30மணிக்கு உயிரிழந்தார். கோலிவுட்டில் பல முன்னணி ஸ்டார்களின் படத்தை தயாரித்து, விநியோகம் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்திருக்கிறார்.

பி.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.