கேலி கிண்டலுக்கு ஆளான 'கொரோனா' சிறுவன்...பிரபல ஹீரோ செய்த நெகிழ்ச்சி செயல்.. இன்று HOT NEWS இதுதான்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி இருக்கிறது. அப்படி ஆஸ்கர் விருது வாங்கிய புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் தான் இந்த நோய்க்கு முதலில் பாதிக்கப்பட்ட பிரபலம் ஆவார். அவரும் அவருடைய மனைவியும் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய பிறகு அவர்களுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதன்பிறகு மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் செய்திருக்கும் ஒரு செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று புகழ்பெற்ற பல பத்திரிகைகளுக்கும் இதுதான் ஹாட் நியூஸ்.
விஷயம் என்னவென்றால் டாம் ஹாங்ஸ் மருத்துவமனையில் இருந்தபோது 8 வயது நிரம்பிய ஒரு சிறுவன் அவருக்கு கடிதம் எழுதியுள்ளான். அந்தச் சிறுவனுடைய பெயர் Corona De Vries. அந்த கடிதத்தில் அவன் "நீங்களும் உங்கள் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இப்போது நலமா? எனக்கு என் பெயர் மிகவும் பிடிக்கும். ஆனால் பள்ளியில் எல்லோரும் என்னை 'கொரோனா வைரஸ்' என்று கிண்டல் செய்கின்றனர். அப்படி செய்யும் போது எனக்கு மிகுந்த கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது" என்று எழுதியுள்ளான்.
அந்தக் கடிதத்தை படித்த ஹாங்ஸ் தற்போது அவனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் "அன்பு தோழர் கொரோனாவுக்கு. நானும் எனது மனைவியும் உங்களுடைய கடிதத்தைப் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். சோதனை நேரத்தில் நம்மை சோர்ந்து விடாமல் செய்வது உங்களை போன்ற நண்பர்கள் தான்.
இந்த உலகத்தில் எனக்கு தெரிந்தவரையில் கொரோனா என்று பெயரிடப்பட்ட ஒரே நபர் நீங்கள்தான். எப்படி சூரியனை சுற்றி கிரீடம் போல ஒரு வட்டம் இருக்கிறதோ. அதேபோல நீ" என்று கூறி மேலும் தனது கொரோனா Typewriterஐ அந்த சிறுவனுக்கு பரிசாக அளித்துள்ளார். அந்த பரிசை பெற்றுக் கொண்ட அச்சிறுவன் "எனக்கு அமெரிக்காவில் ஒரு நண்பர் கிடைத்திருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளான். இந்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.