www.garudabazaar.com

Breaking : விஜய் - நெல்சன் இணையும் தளபதி-65.. அட.. இவங்கதான் ஹீரோயினா..?! செம ஜோடிதான்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படம் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. 

விஜய்யின் ஜோடியாகும் பூஜா ஹெக்டே | Popular actress to pair with vijay in thalapathy 65 nelson film

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

விஜய்யின் ஜோடியாகும் பூஜா ஹெக்டே | Popular actress to pair with vijay in thalapathy 65 nelson film

இதை தொடர்ந்து இவர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி அண்மையில் ரசிகர்களை கவர்ந்தது. 

விஜய்யின் ஜோடியாகும் பூஜா ஹெக்டே | Popular actress to pair with vijay in thalapathy 65 nelson film

இந்நிலையில் விஜய் - நெல்சன் இணையும் தளபதி 65 படத்தின் ஹீரோயின் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் லேட்டஸ்ட் சென்சேஷனல் ஹீரோயினாக அறியப்பட்ட பூஜா ஹெக்டே இத்திரைப்பத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய்யின் ஜோடியாகும் பூஜா ஹெக்டே | Popular actress to pair with vijay in thalapathy 65 nelson film

முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் முதல்முறையாக தளபதி 65-ல் விஜய்யுடன் ஜோடி சேர அதிக வாய்ப்பிருப்பதாக நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் ஜோடியாகும் பூஜா ஹெக்டே | Popular actress to pair with vijay in thalapathy 65 nelson film

People looking for online information on Nelson Dilipkumar, Pooja Hegde, Thalapathy 65, Vijay will find this news story useful.