Corona : அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை - 'பணமே இல்ல காப்பாத்துங்க'... பிரதமருக்கு வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. பல நாடுகளும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மீரா என்பவர் பிரதமர் இம்ரான்கானுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் பிரபல நடிகை Popular actress struck in america due to corona pleads government to rescue

ஷூட்டிங் காரணமாக அமெரிக்காவுக்கு சென்ற நடிகை தற்போது அங்கு சிக்கி தவிக்கிறார். உலகம் முழுவதிலும் கொரோனாவால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்புகள் உள்ள நிலையில், தற்போது அவர் நியூயார்க் பட்டணத்தில் இருக்கிறார்.

ஒரு மாதத்திற்கு முன்பு தனது long-distance என்ற படத்திற்காக அவர் அமெரிக்கா சென்றார். பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அனுப்பி இருக்கும் வீடியோவில் தன்னுடன் வந்த கேமராமேன் இறந்துவிட்டதாகவும் தனியாக மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரதமருக்கு அவர் பேசியிருக்கும் வீடியோவில் "ஒரு மாதத்திற்கு முன்பாக நானும் படக்குழுவினரும், மற்ற நடிகர்களும் அமெரிக்க வந்தோம். கொரோனா  காரணமாக மத்த நடிகர்கள் பாகிஸ்தான் திரும்பி விட்ட நிலையில் நான் மட்டும் இங்கு மாட்டி உள்ளேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. நியூயார்க் முழுவதும் சுடுகாடாக மாறி உள்ளது. நான் அந்நிய நாட்டில் இறப்பதை விரும்பவில்லை. தாங்கள் எப்பொழுதும் கலைஞர்களுக்கு சிறந்த மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் மற்ற நாடுகள் தங்களது குடிமக்களை சொந்த நாட்டிற்கு வரவழைப்பது போல,  என்னையும் தாய்நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor