மருந்துக்காக தவித்த முதியவர்...பைக்கிலேயே கொண்டு சேர்த்த இளைஞர்கள்... நடிகை நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் உலகம் கொரோனா நோய் பரவி வருகிறது. இப்போதைக்கு அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில்  சில தவிர்க்க முடியாத கடினத்திற்கு மக்கள் ஆளாகின்றனர்.

பைக்கிலேயே முதியவருக்கு மருந்து கொண்டு சென்ற இளைஞர்கள் நடிகை நெகிழ்ச்சி Popular actress shares an emotional incident of bi

Biker-கள் என்பவர்கள் நீண்ட நெடு தூரம் மோட்டார் பைக்குகளில் குழுக்களாக பயணிப்பவர்கள். ஆனால் இந்த ஒரு முறை அந்த பயணம் மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாக மாறி இருக்கிறது. கேரளாவை சேர்ந்த வயதான தம்பதிகள் இருவர் தங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் போராடி வந்துள்ளனர் அவர்களது பிள்ளைகளும் பெங்களூருவில் இருக்க, அனைத்து தபால் மற்றும் பார்சல் சர்வீஸ் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மருந்துகளை எப்படி கொண்டு சேர்ப்பது என்று தெரியாமல் தவித்து இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் தான் காவல் துறையும், Bikers Republic என்ற அமைப்பும் ஒன்றிணைந்து அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். Bikers மூலம் அந்த மருந்துகளை அனுப்ப முடிவு செய்தனர். இந்நிலையில் கொரோனா நேரத்தில் பெங்களூருவிலிருந்து கண்ணூர் வரை 700 கிலோ மீட்டர்கள் பைக்கிலேயே பயணித்து, உயிர்காக்கும் மருந்துகளை பத்திரமாக முதிய தம்பதியிடம் சென்று சேர்த்துள்ளனர். அதுவும் எவ்வித கட்டணம் இன்றி வெறும் 12 மணி நேரத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அந்த மருந்துகளை பெற்றுக்கொண்ட தம்பதிகளின் கண்களில் ஆனந்த கண்ணீர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை குஷ்பூ "இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Entertainment sub editor