Behindwoods Gold Medals விருது நிகழ்வில் அடுத்த சர்ப்ரைஸ்… பீஸ்ட் பூஜா ஹெக்டே Live perfomance.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வார இறுதியில் (மே 21 மற்றும் 22) நடைபெற இருக்கும் Behindwoods கோல்ட் மெடல் விருது விழாவில் பல சாதனையாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.

Pooja Hegde live performance in Behindwoods gold medal award

Also Read | RRR இந்தி வெர்ஷனின் ஓடிடி ரிலீஸ் …. நெட்பிளிக்ஸ் வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல்!

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்…

ஒவ்வொரு ஆண்டும் Behindwoods கோல்ட் மெடல் விருது வழங்கும் விழா பிரம்மாண்ட முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Pooja Hegde live performance in Behindwoods gold medal award

விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்…

இந்த விருது வழங்கும் விழாவில் பல பிரபலங்களும் சாதனையாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர். நடிகை சன்னி லியோன், இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இது சம்மந்தப்பட்ட அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு சர்ப்ரைஸாக பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே இந்த விருது வழங்கும் விழாவில் live perfomance செய்ய உள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பு தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

Pooja Hegde live performance in Behindwoods gold medal award

பூஜா ஹெக்டே…

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகி வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்த பூஜா, சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். படத்தில் விஜய்யும் பூஜா ஹெக்டேவும் இணைந்து நடனமாடிய அரபிக்குத்து பாடல் இணையத்தில் வைரல் ஹிட் ஆனது. மேலும் இந்த பாடலுக்கு அவர் தனியாக நடனமாடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அதுபோல ரீல்ஸ் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பூஜா ஹெக்டே பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது விழாவில் பங்கேற்கிறார் என்ற செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Pooja Hegde live performance in Behindwoods gold medal award

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde live performance in Behindwoods gold medal award

People looking for online information on Behindwoods Gold Medal Award, Behindwoods Gold Medal award 2022, BGM2022, Pooja Hegde, Pooja Hegde live performance in BGM will find this news story useful.