LIGER D Logo Top
www.garudabazaar.com

A.R. ரஹ்மான் ஸ்டுடியோவில் மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அப்டேட்! இதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Background Music Work at AR Rahman Studio

Also Read | "இந்த ஊரு என் மேல கோவமா இருக்கும்.. ஆனா நான் யாருனு காட்டுற நேரம்" - பா.ரஞ்சித் Exclusive fans meet promo

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Ponniyin Selvan PS1 Movie Background Music Work at AR Rahman Studio

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், டீஸர் & முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

Ponniyin Selvan PS1 Movie Background Music Work at AR Rahman Studio

A R ரஹ்மான் இசையில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Background Music Work at AR Rahman Studio

இந்நிலையில் லைக்கா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசை நிரல் அமைப்பு ஏ. ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இதற்காக மிக்ஸர் கிரேக் மான் ரஹ்மானுடன் இணைந்துள்ளார். கிரேக் மான் Insidious, Annabelle, Whiplash படங்களில் பணியாற்றியவர். ரஹ்மானின் AM ஸ்டூடியோவில் கிரேக் மானுடன் மணிரத்னம் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Ponniyin Selvan PS1 Movie Background Music Work at AR Rahman Studio

இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Also Read | மோகன் ஜி இயக்கும் 'பகாசூரன்'.. நடிகர் நட்டியின் செம மாஸ் 2nd லுக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Movie Background Music Work at AR Rahman Studio

People looking for online information on AR Rahman Studio, Karthi, Ponniyin Selvan part 1, Ponniyin Selvan PS1 Movie Background Music, Vikram will find this news story useful.